புதிய கட்சி: ஜெ. சமாதியில் அறிவிக்கிறார் மாதவன்

சென்னை,
றைந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை என்ற அமைப்பைத் துவங்கி, அதன் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். ஆரம்பத்தில் அவருக்கு உறுதுணையாக அவரது கணவர் மாதவன் இருந்தார்.

பிறகு கட்சி நிர்வாகிகளை நியமிப்பதில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கணவரை வீட்டிலிருந்து வெளியேற்றினார் தீபா.

ஆனாலும் தனி அமைப்பு துவங்கி, தீபாவை முதல்வர் ஆக்குவதே தனது லட்சியம் என்று முழங்கினார் மாதவன்.

இதன் பிறகும் இருவருக்கும் கருத்து வேற்றுமை ஏற்பட்டது. இதற்கிடைய் இன்று புதிய அமைப்பைத் துவங்கப்போவதாக மாதவன் அறிவித்தார். இந்த அறிவி்ப்பை ஜெயலலிதாவின் நினைவிடத்தில் வைத்து அறிவித்தார்.

அதோபோல இன்று காலை 10.30 மணியளவில் மாதவன், ஜெ., நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த இருக்கிறார். பிறகு தனது கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுகிறார்.

இது குறித்து மாதவனின் ஆதரவாளர்கள், “புதிய கட்சிக்கு தீபா பேரவையின் கொடியையே மாதவன் பயன்படுத்த இருக்கிறார்” என்று தெரிவிக்கிறார்கள்.

இதனால் மீண்டும் தீபா – மாதவன் மோதல் உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கார்ட்டூன் கேலரி