ஜிம்னாஸ்டிக் உலக கோப்பை போட்டியில் தங்கம் வென்ற தீபா கர்மாகர்

காயத்தில் இருந்து திரும்பிய தீபா கர்மாகர் துருக்கியில் நடந்த ஜிம்னாஸ்டிக் உலக கோப்பை போட்டியில் தங்கம் வென்றுள்ளார். சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முழங்காலில் காயமடைந்த தீபா கர்மாகர் ஓய்வு பெற்று வந்தார். ஞாயிற்றுக்கிழமை துருக்கியில் உள்ள மெர்சின் நகரில் எஃப்ஐஜி ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் உலக கோப்பை போட்டியில் பங்கேற்ற இவர் தங்கம் வென்றார்.

dipa

2016ம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற தீபா கர்மாகர் 4வது இடத்தை பிடித்தார். 24வயதை நிரம்பிய தீபா கர்மாகர் ஜிம்னாஸ்டிக் உலக கோப்பை போட்டியில் தங்கம் வெல்வது இதுவே முதல் தடவை. இந்த போட்டியில் பங்கேற்க அவர் தனது பயிற்சியாளர் பிஸ்வேஸ்வர் நந்தியுடன் சென்றிருந்தார்.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற பிறகு தீபா கர்மாகருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவருக்கு தசையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் காரணமாக அவர் ஓய்வில் இருந்து வந்தார். உடல் நலம் தேறியவுடன் காமல்வெல்த் போட்டிகளில் பங்கேற்ற தீபா பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றத்தை அளித்தார். தற்போது உலக கோப்பை போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.

ஆகஸ்ட் மாதம் இந்தோனேசியாவில் நடைபெற உள்ள ஆசிய போட்டிகளில் பங்கேற்க உள்ள இந்திய அணியில் தீபா கர்மாகர் இடம் பிடித்துள்ளார்.