சென்னை

ஜெயலலிதா தாக்கப்பட்டதாக ஜெ. தீபா விசாரணை ஆணையத்தில் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுக சாமி விசாரித்து வருகிறார்.   இந்த விசாரணைக்கு தலைமைச் செயலாளர் உட்பட பலருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.  இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா இன்று விசாரணை ஆணையத்தில்  ஆஜரானார்.   அதன் பின்பு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப் படும் முன்பு தாக்கப்பட்டுள்ளார். அதற்கான ஆவணங்களை நான் நீதிபதி ஆறுமுகசாமியிடம் அளித்துள்ளேன்.   மேலும் போயஸ் தோட்டத்தில் இருந்த சசிகலா உட்பட அனைவரிடமும் விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளேன்” எனக் கூறினார்.