ஓ.பி.எஸ்.,  சிசகலா.. இருவருமே ஊழல்வாதிகள்!: தீபா

ஓ.பி.எஸ்., சசிகலா  இருவருமே  ஊழல் எனும்  குட்டையில் ஊறிய மட்டைகள்தான்  என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா காட்டமாக விமர்சித்திருக்கிறார்.

அ.தி.மு.க.வில் நிலவிய உட்கட்சி பூசல்கள் முடிந்து இரு அணிகளும்  இணைவதற்கான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் அ.தி.மு.க.வின் இரு அணியினரையும்  ஜெ. தீபா விமர்சித்துள்ளர்.

இதுகுறித்த அவர், “ ஓ.பி.எஸ், சசிகலா இருவருமே ஊழல் என்னும் குட்டையில் ஊறிய மட்டைகள் தான். இவர்களது துரோகத்தை மக்களும் அ.தி.மு.க. தொண்டர்களும்  உணர்ந்துவிட்டனர். இவர்கள் இருவரும் இணைவது பற்றிய பரபரப்போ, பதற்றமோ மக்களிடத்தில் சிறிதளவு கூட இல்லை

ஏற்கனவே திட்டமிடப்பட்டு, எழுதிவைக்கப்பட்ட நாடகத்தையே தற்போது ஓ.பி.எஸ் நடத்திக் கொண்டிருக்கிறார்.

இரட்டை இலை சின்னத்தை முடக்க காரணமானவர்களே, இப்போது மீட்க போவதாக நாடகம் நடத்துகிறார்கள்” என்று தீபா தெரிவித்துள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published.