இங்கே ஒரு மறியல்… ஜெ. தீபாவுக்கு போலீ்ஸ் பாதுகாப்பு கேட்டு!

 

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு, அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் இன்று காலை ஈடுபட்டனர்.

மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த தினமான இன்று, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சமாதிக்கு அஞ்சலி செலுத்த ஜெயலலிதாவின் அண்ணா மகள் தீபா வந்தார். அவருடன் அவரது ஆதரவாளர்களும் வந்திருந்தனர்.

அப்பது சிலர், “எங்கள் தலைவி தீபாவுக்கு ஏன் போலீஸ் பாதுகாப்பு அளிக்கவில்லை” என்று குரல் எழுப்பினர். இதைக் கேட்ட பலரும், எம்ஜிஆர் சமாதி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. பதட்டமான சூழல் நிலவியது.

சாலை மறியல் செய்பவர்களுடன்  காவல்துறையினர் சமாதானம் பேசி கலைந்து செல்லும்படி கூறினார்கள்.