முன் ஓவர்களிலேயே பயன்படுத்தப்படும் சென்னை அணியின் தீபக் சஹார்

இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி சிறப்பாக செயல்பட்டு வருவதற்கான காரணமாக விளங்கும் முக்கிய வீரர்களை பட்டியலிடச் சொன்னால், பலரும், தோனி, ஹர்பஜன்சிங், ஷேன் வாட்சன் மற்றும் பிரவோ உள்ளிட்டவர்களை கை காட்டுவார்கள்.

ஆனால், தீபக் சஹார் என்ற பெயர் வெகு சிலரின் சிந்தனைகளுக்கே எட்ட வாய்ப்புள்ளது. ஆனால், சென்னை அணி பெற்ற 3 வெற்றிகளில் அவரின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

தொடக்க ஓவர்களில் இவரைப் பயன்படுத்தும் தோனி, இவரால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என கருதப்படும் இறுதி ஓவர்களில், இவரைப் பயன்படுத்துவதில்லை.

ஃபீல்டிங் கட்டுப்பாடுகள் இருக்கும் நேரங்களில் இவர் பந்துவீசுகையில், கடந்த 3 ஆட்டங்களிலும் இவரின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. இவரது பந்துவீச்சு எகனாமி 4.66 மற்றும் 2.1 என்பதாக உள்ளது.

– மதுரை மாயாண்டி