தீபாவளி பண்டிகை: தீவுத்திடலில் பட்டாசு விற்பனை தொடங்கியது

சென்னை:

தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னை  தீவுத்திடலில் சுமார் 70 பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கடைகளில் இன்று முதல் பட்டாசு விற்பனை தொடங்கி உள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் விற்பனை செய்ய ஒரு இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு உள்ளன. அதன்படி  சென்னை தீவுத்திடலில் ஏராளமான பட்டாசுகள் தற்காலிகமாக அமைக்கப்பட்டு பட்டாசு விற்பனை கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக, சென்னை உயர்நீதி மன்ற நிபந்தனைகளின்படி, பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கடைகளில், இன்றுமுதல் பட்டாசு விற்பனை தொடங்கி உள்ளது.

மேலும், தீ விபத்து நடைபெறாத வகையில் ,தீயணைப்புவண்டி, ஆம்புலன்கள் ஆகியவையும் தயாராக வைக்கப்படுள்ளது.

தீவுத்திடலில் 70 பட்டாசு கடைகளும் அனுமதி வாங்கப்பட்டே அமைக்கப்பட்டு உள்ளதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் முழு அளவில் செய்யப்பட்டுள்ளதாகவும்,  வெளியில் வாங்கும் பட்டாசைவிட 10 சதவிகித சலுகையில் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகிறது என்று  சென்னை பெருநகர பட்டாசு விற்பனையாளர்கள் சங்க செயல் தலைவர் ஷேக் அப்துல்லா தெரிவித்தார்.