சென்னை: கொரோனா பொதுமுடக்கம் முற்றிலும் அகற்றப்படாத நிலையில், தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போகும் பயணிகளுக்கான சிறப்பு பேருந்துக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கி உள்ளது.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நவம்பர் 14ந்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். ஆனால், நடப்பாண்டில் கொரோனா தொற்று முடக்கம் காரணமாக தனியார் பேருந்துக்ள் சேவை இன்னும் தொடங்கப்படவில்லை. அதேவேளையில், மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள தளர்வுகள் காரணமாக,  50சதவிகித பொதுப்போக்குவரத்து சேவை கடந்த செப்டம்பர் மாதம் 1ந்ம் தேதி முதல் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்து நடைபெற்று வருகிறது.
அதுபோல, தற்போதைய நிலையில், அரசு விரைவுப் போக்குவரத்து சார்பில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல 450 பேருந்துகளே இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வரும் அக்.14ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவிருப்பதையொட்டி,  700 சிறப்பு பேரூந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துதுறை தெரிவித்து உள்ளது.தென்மாவட்டங்களான  நெல்லை, திருச்சி, நாகர்கோவில் மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதிக பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில், சிறப்பு பேருந்துகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்கி உள்ளது.  தீபாவளி சிறப்பு பேருந்துகளுக்கான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ள போக்குவரத்து துறை, முன்பதிவு செய்ய விரும்பும் பயணிகள் www.tnstc.in என்ற இணையதள முகவரியை அணுக வேண்டும் என்றும்  தெரிவித்துள்ளது.