தீபாவளி : ரெயில் டிக்கட் முன்பதிவு இன்று தொடங்குகிறது
சென்னை
தீபாவளி சமயத்தில் ரெயில் பயணம் செய்வோருக்கான டிக்கட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
இந்த ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ளது. வெளியூரில் இருந்து சென்னையில் வசிப்பவர்களும் சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களும் பெரும்பாலும் ரெயில் மூலமே பயணம் செய்கின்றனர்.
இவ்வாறு செல்பவர்கள் கடைசி நேரத்தில் டிக்கட் பதிவு செய்வதால் மிகவும் நெரிசல் ஏற்பட்டு வந்தது. அதை ஒட்டி ரெயில்வே நிர்வாகம் 120 நாட்களுக்கு முன்பிருந்தே டிக்கட் முன்பதிவு செய்யும் வசதியை கொண்டு வந்தது.
அதன்படி தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு இன்று (05/07/2018 – வியாழக்கிழமை) தொடங்குகிறது. இன்று காலை 8 மணி முதல் இந்த முன்பதிவு தொடங்க உள்ளது. தெற்கு ரெயில்வேயின் 250க்கு மேற்பட்ட முன்பதிவு மையங்களில் டிக்கட் முன்பதிவு செய்ய முடியும்.