ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் அட்லீ.

தெறி, மெர்சல், பிகில் என விஜய்யுடன் மூன்று படங்களில் இணைந்து பணியாற்றினார்.

இதனிடைய 2019-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியை இயக்குநர் அட்லீயும் ஷாரூக்கானும் இணைந்து பார்த்தனர். ஷாரூக் கான் நடிக்க இருக்கும் புதிய படத்தை இயக்குவதற்காகவே அச்சந்திப்பு நடைபெற்றதாக கூறப்பட்டது.

இந்நிலையில் அந்த படம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சங்கி (Sanki) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகர் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறாராம். சென்னை எக்ஸ்பிரஸ், ஹேப்பி நியூ இயர் படங்களுக்கு பிறகு ஷாருக்கான் – தீபிகா படுகோன் இணைந்து நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.