‘சேஃப் ஹேண்ட்ஸ் சேலஞ்ச்’ சவாலை ஏற்பதாக தீபிகா படுகோன் பதிவு….!

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை 147 பேரைப் பாதித்துள்ளது. இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கேரளாவில் அதிக அளவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று காணப்படுகிறது. இதனால் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பல்வேறு திரையுலக பிரபலங்களும், தங்களுடைய சமூகவலைதள பக்கங்களில் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டெட்ரோஸ் அதனொம் கெப்ரியீஸஸ் கடந்த மார்ச் 13ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவி அதை வீடியோவாக எடுத்து ட்விட்டரில் ‘பாதுகாப்பான கைகள் சவால்’(சேஃப் ஹேண்ட்ஸ் சேலஞ்ச்) பகிர வேண்டி அழைப்பு விடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நடிகை தீபிகா படுகோன் அந்த சவாலை ஏற்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று (17.03.20) அறிவித்தார்.