நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ள படத்தின் நாயகியாக தீபிகா படுகோன் ஒப்பந்தம் ….!

‘சாஹோ’ படத்தைத் தொடர்ந்து, ராதா கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் பிரபாஸ்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கவுள்ளது.

நாக் அஷ்வின் இயக்கவுள்ள இந்தப் படத்தின் நாயகியாக தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தீபிகா படுகோன், தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகும் முதல் படமாக பிரபாஸ் – நாக் அஷ்வின் படம் அமைந்துள்ளது.