தீபிகா படுகோனே 12 வழக்கறிஞர்களுடன் ஆலோசனை.

இந்தி நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கு, வேறு திசையில் பயணிக்க ஆரம்பித்துள்ளது.

மும்பை போலீஸ், சி.பி.ஐ. அமலாக்கத்துறை, போதைப்பொருள் தடுப்பு பிரிவு என நான்கு அமைப்புகள் , இந்த மரணத்தை விசாரித்து வந்தாலும், போதைப்பொருள் தடுப்பு பிரிவு விசாரணையே, ஊடகங்களின் கவனம் ஈர்த்துள்ளது.

சுஷாந்துக்கு அவரது காதலி ரியா சக்ரவர்த்தி,  போதைப்பொருள் வாங்கி கொடுத்ததாகக் கூறிய நிலையில், அவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் ’’ஏ-கிரேடு’’, நட்சத்திரங்கள் என்று கூறப்படும் நடிகைகள் தீபிகா படுகோனே, ரகுல் பிரீத் சிங், சாரா அலிகான், ஷரத்தா கபூர் ஆகியோருக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு, விசாரணைக்கு  ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளது.

இதையடுத்து, சினிமா படப்பிடிப்புக்குக் கோவா சென்றுள்ள தீபிகா படுகோனே, அங்கிருந்த படி, தனது 12 வழக்கறிஞர்கள் குழுவுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இதன் பின்னர் அவர், தனி விமானம் மூலம் கோவாவில் இருந்து நேற்று மும்பை வந்தார். அவர் நாளை ,, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்கிறார்.இதனிடையே கடந்த ஆண்டு கரண்ஜோகர் வீட்டில் நடந்த போதைப்பொருள் விருந்து குறித்த வீடியோ போதைப்பொருள் தடுப்பு பிரிவிடம் சிக்கி உள்ளது.

இதன் உண்மைத் தன்மை குறித்து ஆராய ‘போரென்சிக்’ துறைக்கு  அந்த வீடியோ அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

-பா.பாரதி.