நடிகை தீபிகா படுகோனேவின் தந்தைக்கு கொரோனா

பெங்களூரு

டிகை தீபிகா படுகோனேவின் தந்தையும் முன்னாள் பாட்மிண்டன் வீரருமான பிரகாஷ் படுகோனேவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாலிவுட் பிரபல நடிகையான தீபிகா படுகோனே கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார்.   இவரது தந்தை பிரகாஷ் படுகோனே இந்திய பாட்மிண்டனில் புகழ் பெற்று விளங்கிய வீரர் ஆவார்.   இவர் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்று தற்போது பெங்களூரு நகரில் வசித்து வருகிறார்.

தற்போது 65 வயதாகும் பிரகாஷ் படுகோனேவுக்கு கொரோனா  பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  அவருடன் வசித்து வரும் அவர் மனைவி உஜ்ஜாலா மற்றும் இளைய மகள் அனிஷா ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.    அனைவரும் தங்களை வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர்.

ஆயினும் பிரகாஷ் படுகோனேவுக்கு உடல் வெப்பநிலை குறையாமல் இருந்துள்ளது.  இதையொட்டி அவர் பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.   அவர் உடல் நலம் தேறி  வருவதால் இன்னும் 2 அல்லது 3 தினங்களில் வீடு திரும்ப உள்ளார்.