நேற்று இரவு 9.56 மணிக்கு அமெரிக்க மக்களுக்குத் தீபாவளி தொடக்கம் : ப சிதம்பரம்

டில்லி

மெரிக்கா அதிபராக ஜோ பைடன் வெற்றி பெற்றது குறித்து முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் டிவிட்டரில் கருத்து சொல்லி உள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்கெடுப்பு தொடங்கியதில் இருந்தே டிரம்ப் மற்றும் ஜோ பைடன் இடையே கடும் இழுபறி நிலவியது.

தொடர்ந்து முன்னிலையில் இருந்த ஜோ பைடன் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.

அவரது வெற்றிக்கு உலகத் தலைவர்கள் பலரும்  வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப சிதம்பரம் இது குறித்து டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.

அந்த செய்தியில் சிதம்பரம்,

“அமெரிக்க மக்களுக்கு நேற்று இரவு 9.56 மணிக்கு தீபாவளி தொடங்கியது

ஜனநாயகம் என்பது யாரும் நமக்கு அளித்த பிச்சையல்ல. மகாத்மா காந்தி தலைமையில் நாம் போராடி வென்றது.

அந்த ‘வாராது போல் வந்த மாமணியை” ஒவ்வொரு நாளும் போராடிக் காப்பாற்ற வேண்டும்'”

எனப் பதிந்துள்ளார்.