அவதூறு வழக்கு: சென்னை நீதிமன்றத்தில் டிடிவி.தினகரன் ஆஜர்

சென்னை:

மிழக அமைச்சர்களை அவதூறாக பேசியதாக டிடிவி தினகரன் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் சென்னை கோர்ட்டில் டி.டி.வி.தினகரன்  இன்று  ஆஜர் ஆனால். அதையடுத்து வழக்கின் விசாரணையை ஜூன் 28ந்தேதி நீதி மன்றம் ஒத்தி வைத்துள்ளது.

ஜெ.மறைவை தொடர்ந்து அதிமுக இரண்டாக உடைந்தது. சசிகலாவுக்கு ஆதரவாக ஒரு தரப்பும், ஓபிஎஸ்-சுக்கு ஆதரவாக சிலரும் திரண்டனர். பின்னர் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதை தொடர்ந்து, ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து அதிமுகவை கைப்பற்றியது.  அதையடுத்து சசிகலா குடும்பத்தினர் கட்சியில் இருந்து ஓரங்கப்பட்டனர்.

இதையடுத்து டிடிவி தினகரன் தனி அணியாக பிரிந்தார். அவருக்கு ஆதரவாக 18 எம்எல்ஏக்களும் சென்றனர். அதைத்தொடர்ந்து, தமிழக முதல்வர் மற்றும்  அமைச்சர்கள் மீது வசை பாடினார். எடப்பாடி முதல் அனைத்து அமைச்சர்களும்  ஊழல்வாதிகள் என்று டிடிவி தினகரன் பொதுமேடையில் பகிரங்க பேசினார்.

இதை எதிர்த்து தமிழக அமைச்சர்கள் சார்பில், அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.  வழக்கின் விசாரணைக்காக டி.டி.வி.தினகரன் சென்னை கோர்ட்டில் ஆஜரானார். இந்நிலையில் வழக்கின் விசாரணையை ஜூன் 28 ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.