முதல்வர் குறித்து அவதூறு: திமுக எம்.பி., எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு

கோவை:

மிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறாக பேசியதாக திமுக எம்.பி., எம்எல்ஏக்கள் மீது கோவை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சமீபத்தில் கோவை பேரூர் பகுதியில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் திமுக எம்.பி.  ஆர்.எஸ் பாரதி, கார்த்திக் எம்.எல்.ஏ  உள்பட பலர் கலந்துகொண்டனர். அப்போது, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்க ஊழல் குற்றவாளிகள் என்றும், பலர்மீது வழக்குகள்  நிலுவையில் இருப்பதாகவும், பாஜகவின் அடிமையாக செயல்பட்டு வருகின்றது என்றும் தமிழக அரசு குறித்து சரமாரியாக  குற்றச்சாட்டுக் களை அள்ளி வீசினர்.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து அதிமுகவினர் புகார் கூறினர்.

அதைத்தொடர்ந்து  பேரூர் காவல்துறையினர், கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக அமைப்பு செயலாள ரும் மாநிலங்களவை எம்பியுமான ஆர் எஸ் பாரதி, கார்த்திக் எம்எல்ஏ,  மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் உள்பட 7 பேர் மீது பேரூர் காவல்துறையினர் அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளனர்.