மதுரை:  
ன்மீது போடப்பட்டுள்ள அவதூறு வழக்கை ரத்துசெய்ய கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஸ்டாலின் மனு செய்துள்ளார்.
திண்டுக்கல்லில் 2013ல் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின், சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்துவதில் அ.தி.மு.க., அரசின் நிலைப்பாடு குறித்து உண்மைக்கு மாறாக பேசியதாகவும், அரசின் நலத்திட்டங்கள் குறித்து விமர்சித்ததாகவும்,   நில அபகரிப்பில் ஈடுபட்டதாக தி.மு.க.,வினர் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக பேசியது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா சார்பில்   திண்டுக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்   ஸ்டாலின்  மீது அவதூறு  வழக்கு தொடர்ந்தார்.
stalin
இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஹைகோர்ட் கிளையில் எதிர்க்கட்சித் தலைவர்  மு.க.ஸ்டாலின் மனு செய்துள்ளார்.
வழக்கு குறித்து ஸ்டாலின் கூறியதாவது:  எதிர்க்கட்சிகளின் பேச்சு சுதந்திரத்தை பறிக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் மீது  அரசு வழக்கு தொடர்ந்து வருகிறது. என்மீதும்  தமிழக அரசு உள்நோக்குடன்  வழக்குத் தொடர்ந்துள்ளது.  வழக்கு விசாரணைக்கு ஆஜராகவேண்டி இருப்பதால் சட்டசபையில் கலந்துகொள்ள முடியாமல் போகிறது.   தற்போது சட்டசபை கூட்டம் நடப்பதால், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் பங்கேற்க வேண்டியுள்ளது.
இதனால் கீழமை நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்களிக்க வேண்டும். அவதூறு வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என  உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதி விமலா முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஸ்டாலின் சார்பாக  வழக்கறிஞர் இளங்கோ ஆஜராகி, ‘இம்மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும்,’ என்றார்.
ஆனால், அரசு வழக்கறிஞர் கந்தசாமி எதிர்ப்புத் தெரிவித்தார்.  இருதரப்பு வாதங்களையும்  கேட்ட நீதிபதி, ‘இம்மனுவிற்கு பிரதான எண் இடப்பட்டு,  இன்று  விசாரணைக்கு பட்டியலிடப்படும்,’ என்றார்.