வருங்காலத்தில் அதிமுக தோல்வியை தழுவுமாம்….! மு.க.ஸ்டாலின் ஆரூடம்

சென்னை,

ரும்காலத்தில் அதிமுக தோல்வியை தழுவும், திமுக தொடர்ந்து மக்கள் பணி ஆற்றும் என்று ஸ்டாலின் கூறினார்.

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 3 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இதுகுறித்து  எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் கூறும்போது வருங்காலத்தில் அதிமுக தோல்வி பெறும் என்று கூறினார்.

aidmk

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது முதல் 3 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களே முன்னிலையில் இருந்தனர்.

இறுதியில் தஞ்சாவூரில் ரெங்கசாமியும், அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜியும், திருப்பரங்குன்றத்தில் ஏ.கே.போசும் வெற்றி பெற்றனர். இதன் காரணமாக அதிமுகவினர் ஆடிபாடி இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். சென்னை, அதிமுக தலைமை அலுவலகத்திலும் தொண்டர்கள் இனிப்பு வழங்கி வெற்றியை கொண்டாடி மகிழ்கின்றனர்.

 

இந்நிலையில் தேர்தல் முடிவு குறித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நிருபர்கள் கேட்டனர்.

அப்போது அவர் கூறியதாவது:-

stalin

நடந்து முடிந்த தேர்தலில் தேர்தல் ஆணையம்  ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளது. பணப்பட்டு வாடாவை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை.

தற்போதைய  தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றிருந்தாலும், வருங்காலத்தில் தோல்வியை தழுவும். திமுக தேர்தல் தோல்வி குறித்து கவலைப்படாமல் தொடர்ந்து மக்கள் பணியாற்றும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கார்ட்டூன் கேலரி