கார் மாறியதால்  உயிர்  தப்பிய மத்திய மந்திரி

புதுடெல்லி:

லுவலக வேலையாக மராட்டிய மாநிலம் வந்திருந்த மத்திய  உள்துறை இணை மந்திரி காரை மாற்றி ஏறியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Minister-Hansraj-Ahir-skips-official-car-escapes-mishap_SECVPF
மத்திய உள்துறை இணை மந்திரி ஹன்ஸ்ராஜ் ஆகிர். மராட்டிய மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு  இன்று புதுடெல்லி செல்வதற்காக  நாக்பூர் விமான நிலையத்துக்கு புறப்பட்டார்.
அவருக்கான அரசு காரில் பாதுகாப்பு அதிகாரிகளையும் தனது கட்சியினரையும் வரும்படி தெரிவித்த அவர், மற்றொரு  காரில் ஏறி விமான நிலையத்துக்கு சென்றார்.

சந்திராப்பூரில் பகுதியில் உள்ள மோர்வா என்ற கிராமத்தின் வழியாக கார் சென்றபோது கன மழையில் காரணமாக சாலையில் இருந்து விலகி சாலையோர மரத்தின்மீது பயங்கரமாக மோதியது.

காரில் இருந்தவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. மந்திரி ஹன்ஸ்ராஜ் வேறொரு காரில் சென்றதால்  அதிர்ஷ்டவசமாக  விபத்தில் இருந்து தப்பித்தார்.