தாய்லாந்து பிரதமருடன் நிர்மலா சீத்தாராமன் சந்திப்பு

பாங்காக்:

அரசு முறை பயணமாக ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாய்லாந்து சென்றார். அவரை அந்நாட்டின் பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் ரவுங்ரோஜனா சும்ராஸ்ரோம்ருன் வரவேற்றார்.

இதையடுத்து இன்று தாய்லாந்து பிரதமர் ப்ரயுத் சான்-ஓ-சாவை நிர்மலா சீத்தாராமன் சந்தித்தார். இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து சந்திப்பின் போது ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் தாய்லாந்து துணை பிரதமர், பாதுகாப்பு அமைச்சருடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.