எல்லையில் மீண்டும் பதற்றம்: முப்படை தளபதிகளுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் திடீர் ஆலோசனை

--

டெல்லி: லடாக் எல்லையில் பதற்றம் எழ, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் பங்கோங்சோ ஏரியின் தெற்கு கரை பகுதியில் கடந்த 29ம் தேதி சீன வீரர்கள் அத்துமீற முயன்றனர். இந்த  முயற்சியை இந்திய ராணுவம் அதிரடியாக முறியடித்தது.

இந் நிலையில எல்லை பகுதியான லடாக்கில் மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டு உள்ளது. இதையடுத்து, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். லடாக் எல்லையில் சீன ராணுவ அத்துமீறலை இந்திய ராணுவம் முறியடித்து இருக்கிறது. ஆலோசனையின் முடிவில் முக்கிய விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You may have missed