டெல்லி:
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய சீன  எல்லைப்பகுதியான  லடாக்  எல்லைப்பகுதிக்கு இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று செல்கிறார். அங்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு நடத்துகிறார்.

கடந்த மாதம் இந்தியா சீன துருப்புகளுக்கு இடையே லடாக் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வந்தது. இதனால், இரு நாட்டு உயர் ராணுவ அதிகாரிகள் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்று, பதற்றம் தணிந்துள்ளது.
இந்த நிலையில், எல்லையில் பதற்றம் உள்ள நிலையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் இன்று லடாக் செல்கிறார். 2 நாடகள் அவர் அங்கு ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. ராஜ்நாத் சிங் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
ஏறக்னவே கடந்த சில தினங்களுக்கு முன்பு  பிரதமர் மோடி திடீரென லடாக் சென்று வீரர்களை சந்தித்து பேசினார்.. மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் ஜவான்களை சந்தித்தும் ஆறுதல் கூறிய குறிப்பிடத்தக்கது.