நேருவை சிறுமைப்படுத்துவது மலை மீது கல் எறிவதற்கு சமம் : சசிதரூர்

டில்லி

நேருவை சிறுமைப்படுத்துவது மலை மீது கூழாங்கற்கலை எறிவது போல என காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கூறி உள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர் மறைந்த பிரதமர் ஜவகர்லால் நேருவைக் குறித்து ஒரு புத்தகம் எழுதி உள்ளார். நேரு : இந்தியாவின் கண்டுபிடிப்பு எனப் பெயரிட்டுள்ள அந்த ஆங்கிலப் புத்தகத்தின் இரண்டாம் பதிப்பு வெளியீட்டு விழா நேற்று டில்லியில் நடந்தது.

இந்த விழாவில் கலந்துக் கொண்ட சோனியா காந்தி தற்போது ஆட்சியில் உள்ள யாரும் நேருவுக்கு ஈடு இணை ஆக மாட்டார்கள் என பேசினார்.
புத்தக ஆசிசியரன சசி தரூர் தனது புத்தகத்தில், ”நேருவை தற்போது ஆட்சியில் உள்ளவர்கள் மிகவும் சிறுமைப் படுத்தி வருகின்றனர். அவை எல்லாம் மலையின் மீது கூழாங்கற்களை எரிவது போல் ஆகும். அவர் நாட்டுக்கு அளித்த அர்ப்பணிப்புகளை புரித்து அளவிட இவர்களால் முடியாது.

இந்திய நாட்டுக்கு அவரால் ஏற்பட்டுள்ள தாக்கம் கால வரைமுறையை தாண்டியது. அவர் செய்தவைகளை நாம் ஒப்புக் கொள்ளவில்லை எனினும் இந்த நாடு முன்னேறியதற்கு அவரும் ஒரு காரணம் என்பதால் அவர் பணியை யாராலும் அளவிட முடியாது.” என நேருவை புகழ்ந்துள்ளார்