அலோக் வர்மா மீதான விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்த உச்சநீதி மன்றம்

டில்லி:

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா மீதான விசாரணை அறிக்கையை த்திய கண்காணிப்பு ஆணையம்  சமர்ப்பித்துள்ள நிலையில்,  விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு உச்சநீதி மன்றம் ஒத்தி வைத்தது.

ஊழல் வழக்கில் சிக்கியுள்ள பிரபல தொழிலதிபர் மொயின் குரேஷியிடம் ரூ.2 கோடி பெற்றதாகசிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதும் ராகேஷ் அஸ்தானா புகார் அளித்துள்ளார். இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வரும் நிலையில்,  சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் அஸ்தானா ஆகியோரை மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது.

அவர்கள் மீது சிறப்பு இயக்குநர் அலோக் வர்மாமீது சிபிஐ தலைமையகம்வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இதையடுத்து, தனக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டதற்கு எதிராகஅலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்குவிசாரணை கடந்த அக்டோபர் மாதம் 26ந்தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, இதுகுறித்து மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரித்து 2 வார காலத்திற்குள் சீலிட்ட கவரில் அறிக்கை சமர்ப்பிக்க உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், சஞ்சய் கிஷன் கவுல் தலைமை யிலான அமர்வில் நடைபெற்றது. அப்போது சீலிட்ட கவரில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா வாதாடினார்.

இந்த நிலையில் வழக்கின் விசாரணையை வரும் 10ந்தேதிக்கு உச்சநீதி மன்றம் ஒத்தி வைப்பதாக அறிவித்து உள்ளது.