தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி: மு.க.ஸ்டாலின்

சென்னை:

18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதன் காரணமாக வழக்கு 3வது நிதிபதியின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்,

ஜனநாயக மாண்பினை காப்பதில் நீதிமன்றங்கள் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ள நிலையில், தெளிவான-நியாயமான தீர்ப்பை வழங்கவேண்டும்

தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி என்பதுடன் பெரும் காலதாமதத்தால் பயனற்றதாகிவிடும். அதனை நீதிமன்றம் தவிர்க்கும் என நம்புகிறேன்.

இவ்வாறு திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.