டிக்டாக், சீனப்பொருட்களை புறக்கணிக்க வேண்டும்…! 3 இடியட்ஸ் புகழ் சோனம் வாங்சுக் வலியுறுத்தல்

டெல்லி: டிக்டாக்கையும் சீனாவில் தயாரிக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் புறக்கணிக்க வேண்டும் என்று சோனம் வாங்சுக் வலியுறுத்தி உள்ளார்.

இந்தியாவிற்கும் சீனாவிற்கு இடையில் மீண்டும் பிரச்சனை எழுந்துள்ளது. மே 5ம் தேதி லடாக் எல்லையில் சீனாவின் போர் படைகள் அத்துமீறி உள்ளே நுழைந்தது. பின்னர் சிக்கிம் எல்லையில் சீனாவின் படைகள் அத்து மீறி வந்தது.

ஆகையால் 2 எல்லையிலும் சீனா – இந்திய படைகள் இடையே மோதல் ஏற்பட்டது. அதன் எதிரொலியாக இரு நாடுகளின் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டு வருகிறது. அதனால் போர் பதற்றம் உருவாகி இருக்கிறது.

இந் நிலையில், டிக்டாக்கையும் சீனாவில் தயாரிக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் புறக்கணிக்க வேண்டும் என்று சோனம் வாங்சுக் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது:

ஒரு வாரத்தில் அனைத்து சீன மென்பொருட்களையும், ஒரு வருடத்தில் அனைத்து சீன ஹார்டுவேர் பொருட்களையும் விட்டுவிடுங்கள். இந்த புறக்கணிப்பு அதிகரித்துவரும் ஆக்கிரமிப்புக்கு எதிரான மக்கள் இயக்கமாக மாற்றப்பட வேண்டும் என்றார். 3 இடியட்ஸ் படத்தில் அமீர்கான் நடித்த புன்சுக் வாங்டுவின் கதாபாத்திரத்தின் உதாரணமாக திகழ்ந்தவர் இந்த சோனம் வாங்சுக் என்பது குறிப்பிடத்தக்கது.