டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை துப்புரவு கண்காணிப்பாளர் கொரோனாவால் மரணம்

டில்லி

டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை துப்புரவு கண்காணிப்பாளர் ஹீராலால் கொரோனாவால் உயிர் இழந்துள்ளார்.

டில்லியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கு 14053 பேர் பாதிக்கப்பட்டு 276 பேர் மரணம் அடைந்துள்ளன்ர்.  கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் நான்காம் இடத்தில் டில்லி உள்ளது.  இங்குள்ள புகழ்பெற்ற எய்ம்ஸ் மருத்துவமனை உணவகத்தில் பணி  புரிந்த ஊழியருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிர் இழந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் துப்புரவுப் பணி கண்காணிப்பாளராக ஹீராலால் என்பவர் பணி புரிந்து வந்தார்.   இவர் அர்சு அறிவித்த முன்னெச்சரிக்கை முறைப்படி சுகாதாரப் பணிகளை மேற்கொண்டு வந்தார்.  ஆயினும் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது   எய்ம்ஸ் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று உயிர் இழந்தார்.

ஹிராலால் இங்குள்ள அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் நல்ல அன்பைப் பெற்றிருந்தார்.  அவர் பணி நேரத்தில் எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் பணியைக் கவனித்து வந்துள்ளார்.   இவர் கொரோனா தாக்கும் வரை ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் தொடர்த்னுபணிக்கு வந்துள்ளார்.

அவரது மறைவு மருத்துவமனை ஊழியர்களுக்கு மிகவும் மனத்துயரை அளித்துள்ளது.  சுமார் இரு தினங்களுக்கு முன்பு எய்ம்ஸ் மருத்துவமனை முன்னாள் மருத்துவத் துறைத் தலைவர் ஜே என் பாண்டே கொரோனாவால் உயிர் இழந்தது குறிப்பிடத்தக்கதாகும்.