பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்த டெல்லி – பெங்களூருவை 6 விக்கெட்டுகளில் வென்றது!

அபுதாபி: பெங்களூருவுக்கு எதிரான போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது டெல்லி அணி. இதன்மூலம், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது அந்த அணி.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்தது.

பின்னர், சற்று எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணியின் துவக்க வீரர் பிரித்விஷா 9 ரன்களில் நடையைக் கட்டினார்.

மற்றொரு துவக்க வீரர் ஷிகர் தவான் 41 பந்துகளில் 54 ரன்களை அடித்தார். ரஹானே 46 பந்துகளில் 60 ரன்கள‍ை அடித்தார். இவர்கள் இருவருமே கிட்டத்தட்ட வெற்றியை உறுதிசெய்துவிட்டனர்.

மார்கஸ் ஸ்டாய்னிஸ் 10 ரன்களை அடிக்க, 19 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களை எடுத்து, 6 விக்கெட்டுகளில் வென்றது டெல்லி அணி.

பெங்களூரு பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. பெங்களூரு அணி, தற்போது புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. நாளையப் போட்டியில், மும்பை அணியை, ஐதராபாத் அணி பெரிய வித்தியாசத்தில் வென்றாலும்கூட, பெங்களூரு அணி பிளே ஆஃப் செல்வது கிட்டத்தட்ட உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.