விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் நுழைந்தது டில்லி

பெங்களூரு:

மாநிலங்களுக்கு இடையேயான விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டிகள்  நடைபெற்று வருகின்றன.  நேற்று நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜார்க்கண்ட் அணியை வீழ்த்தி டில்லி அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

37 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வந்தன. இதில் லீக் மற்றும் கால் இறுதி போட்டிகள் முடிந்துள்ள நிலையில் நேற்று அரை இறுதிப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஏற்கனவே நடைபெற்ற  த மற்றொரு அரை இறுதியில், ஐதராபாத் அணியை மும்பை அணி வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்தது.

இந்த நிலையில்,  பெங்களூருவில்  நேற்று நடைபெற்ற  2-வது அரை இறுதி ஆட்டத்தில் டில்லி ஜார்க்கண்ட் அணிகளுக்கு இடையே நேற்று ஆட்டம்  நடைபெற்றது  மோதின. ‘டாஸ்’ ஜெயித்த டில்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதை யடுத்து, ஜார்கண்ட் அணி மட்டையுடன் களமிறங்கியது.

டில்லியின் அணியின் அபாரமான பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல்  ஜார்கண்ட் அணி மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்து. விகாஸ் சிங் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து 71 ரன்கள் எடுத்தார். ஆனந்த் சிங் 36 ரன்களும், ஷாபாச் நதிம் 29 ரன்களும் எடுத்தனர். இறுதியில், ஜார்க்கண்ட் அணி 48.5 ஓவரில் 199 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வெளியேறியது.

டில்லி அணி வீரக்ள்  நவ்தீப் சைனி 4 விக்கெட்டும், குல்வந்த் கெஜ்ரோலியா, பிரான்ஷு விஜய்ரன் ஆகியோர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதையடுத்து,  200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டில்லி அணி களத்தில் புகுந்தது. தொடக்கத்தில் ஜார்க்கண்ட் அணியினரின் துல்லியமான பந்துவீச்சில் சிக்கி திணறிய டில்லி அணி வீரர்கள் போகப்போக சுதாரித்து ஆடத்தொடங்கினார்.

டில்லி அணியின் நிதிஷ் ரானா மற்றும் பவன் நெகி ஆகியோர் 39 ரன்கள் எடுத்தனர். கவுதம் க ம்பீர் 27 ரன்களும் எடுத்தார். இறுதியில், டில்லி அணி 49.4 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 200 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று, இறுதி போட்டியில் நுழைந்தது.

பெங்களூருவில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் மும்பை – டில்லி அணிகள் மோதுகின்றன.