டெல்லி பாஜக தலைவர் அதேஷ் குப்தாவுக்கு கொரோனா உறுதி: டுவிட்டரில் அறிவிப்பு

டெல்லி: டெல்லி பாஜக தலைவர் அதேஷ் குப்தாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளது. பொதுமக்களை மட்டுமல்லாது, முக்கிய அரசியல் கட்சி தலைவர்களையும் கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது.

இந் நிலையில், டெல்லி பாஜக தலைவர் அதேஷ் குப்தாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி உள்ளார்.

டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டு உள்ளதாவது: கடந்த வாரம், லேசான காய்ச்சலுக்குப் பிறகு நான் ஒரு கோவிட் சோதனை செய்தேன். அதன் அறிக்கை நெகட்டிவ்வாக இருந்தது. எனக்கு மீண்டும் உடல்நிலை சரியில்லாததால் மறுபடியும் சோதனை செய்து கொண்டேன். அப்போது கொரோனா பாசிட்டிவ் என்று வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி