டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று சோதனையான ஆர்டிபிசிஆர் பரிசோதனைக் கட்டணம்  தனியார் ஆய்வகங்களில் 2,400 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது,  அதை ரூ. 800 ரூபாயாக குறைத்து  முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டு உள்ளார்.

டெல்லியில் கொரோனா தொற்று பரவல் 3வது ஆலை வீசுகிறது. இதனால், மீண்டும் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.  இதையடுத்து, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த  உச்சநீதிமன்றமும் மத்திய, மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து,   மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் டெல்லியில்  நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கொரோனா பரிசோதனைக்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டணத்தை டெல்லி மாநில அரசு குறைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.  அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டு வரும், தனியார் மருத்துவமனை மற்றும் பரிசோதனைக்கூடங்களில், இதுவரை ரூ. 2,400  வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த கட்டணத்தை 800 ஆக குறைத்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.