டில்லி:

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியது.

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மனு மீது பிற்பகல் 3 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

இதையடுத்து 3 மணிக்கு தீர்ப்பு வழங்கபட்டது. அதில் கார்த்தி சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்கபட்டது. அவரை ஏப்ரல் 16ம் தேதி வரை கைது செய்ய சிபிஐக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. வழக்கு விசாரணையும் அன்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அழைத்த போதெல்லாம் விசாரணை ஆஜராக வேண்டும் என்று கார்த்தி சிதம்பரத்துக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.