டெல்லி: டெல்லி சலோ விவசாயிகள் போராட்டம் இன்று 23-வது நாளாக தொடர்கிறது.  இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகளில், குளும் குளிர் காரணமான இதுவரை 20 விவசாயிகள் இறந்துள்ளதாக  போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர். நேற்று மேலும்  ஒரு விவசாயி, ஒருவர் குளிர் தாங்காமல் உயிரிழந்துள்ளார்.

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லி சலோ என்ற பெயரில் தலைநகர் டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள், டெல்லியில் குவிந்துள்ளனர்.  இன்று  23-வது நாளாக போராடி வருகின்றனர்.

வடமாநிலங்கள் தற்போது கடும் குளிர் நிலவுகிறது. டெல்லியில் அதிகாலை நேரத்தில் 4 டிகிரிக்கும் கீழ் வெப்பநிலை சரிவதால் விவசாயிகள் குளிரில் நடுங்குகின்றனர். இதனால், கடுமையான  இன்னல்களையும்  சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில், விவசாயிகள் போராட்டம் தொடங்கியதில் இருந்து இதுவரை 20-ற்கும் மேற்பட்ட விவசாயிகள் குளிர் தாங்காமல் உயிரிழந்துள்ளனர். நேற்று பஞ்சாபை சேர்ந்த 37 வயது விவசாயி ஒருவர், கடுங்குளிரால் உயிரிழந்தார். சராசரியாக ஒவ்வொரு நாளும் ஒரு விவசாயி உயிரிழந்துள்ள வருவதாக  போராட்டக்குழுவினர் வருத்தம் தெரிவித்து உள்ளனர்.

வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெறும் வரை தங்களது போராட்டம் தொடருமென, விவசாயிகள் உறுதியுடன் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

“பிரதமர் விவசாயிகளுடன் பேச வேண்டும் மற்றும் பண்ணை சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். இந்த சட்டங்களுக்கு எதிரான எங்கள் போராட்டத்தை நாங்கள் கைவிட மாட்டோம்” என்று பஞ்சாபின் கிசான் மஜ்தூர் சங்கர்ஷ் குழுவின் தயால் சிங் உறுதிபட தெரிவித்துள்ளார்.