பெரிய இலக்கு – ஆனாலும் பஞ்சாபை எளிதாக வென்றது டெல்லி!

மும்பை: பஞ்சாப் அணி நிர்ணயித்த 196 ரன்கள் என்ற பெரிய இலக்க‍ை, சாதாரணமாக தட்டித் தூக்கியது டெல்லி அணி.

அந்த அணியின் துவக்க வீரர்களான பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் இருவருமே, கிட்டத்தட்ட வெற்றியை உறுதிசெய்துவிட்டனர் எனலாம். பிரித்விஷா, 17 பந்துகளில் 32 ரன்களை எடுத்து ஆட்டமிழக்க, தவானோ, 49 பந்துகளில் 2 சிக்ஸர்கள் & 13 பவுண்டரிகளுடன் 92 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதிகட்டத்தில், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 13 பந்துகளில் 27 ரன்களையும், லலித் யாதவ் 6 பந்துகளில் 12 ரன்களையும் அடிக்க, டெல்லி அணி 18.2 ஓவர்களிலேயே, 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, மிகப்பெரிய இலக்கை எளிதாக சேஸ் செய்து முடித்தது.

டெல்லி கேப்டன் ரிஷப் பன்ட், நேற்று 15 ரன்கள் மட்டுமே அடிக்க, ஸ்டீவ் ஸ்மித்தோ 12 பந்துகளில் 9 ரன்களை மட்டுமே சேர்த்தார்.

பஞ்சாப் அணியின் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. மூத்த வீரர் முகமது ஷமி, 4 ஓவர்கள் வீசி, விக்கெட் எடுக்காமல் 53 ரன்களை வாரி வழங்கினார்.