டில்லியில் கெஜ்ரிவால் போராட்டம் 6வது நாளாக நீடிப்பு

டில்லி:

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 6வது நாளாக கவர்னர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஆம் ஆத்மி ஆட்சி, டில்லி கவர்னர், ஐஏஎஸ் அதிகாரிகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. ஆட்சியாளர்களை கண்டுகொள்ளாமல் கவர்னரின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் நேரடியாக செயல்படுவதாக முதல்வர் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி, கவர்னர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகிறார்.

இந்த வகையில் 6வது நாளாக இன்றும் போராட்டம் நீடித்தது. அவருடன் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா, அமைச்சர்கள் சத்யேந்தர் ஜெயின், கோபால் ராய் ஆகியோரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வீடுவீடாக சென்று பிரச்சாரம் மேற்கொள்வோம் என்று கெஜ்ரிவால் போராட்டத்தின் போது அறிவித்துள்ளார்.

அதிகாரிகள் இல்லாமல் பிரதமர் மோடி ஒரு நாள் பணியாற்றிவிட்டால், அதை பின்பற்றி நாங்களும் அதிகாரிகள் இன்றி பணியாற்ற தயாராக இருக்கிறோம் என்று கெஜ்ரிவால் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.