நாட்டின் தலைநகர் டெல்லில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது.
கொரோனா பாதிப்பு அங்கு மிக அதிகமாவே உள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் கொரோனாவுக்கு ஆயிரத்து 195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 27 பேர் உயிர் இழந்தனர்.
மொத்தம் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அந்த விதிகளை பின்பற்றி டெல்லியில் ஓட்டல்களை திறக்க ஆம் ஆத்மி அரசு முடிவு செய்தது.
‘’டெல்லியில் உள்ள ஓட்டல்கள் தொடர்ந்து மருத்துவ மையங்களாக இருப்பதை மாநில அரசு விரும்ப வில்லை. அவை செயல்படலாம்’’ என டெல்லி மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் இதனை ஏற்க டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பாய்ஜல் மறுத்து விட்டார்.
டெல்லி அரசின் முடிவை அவர் நிராகரித்துள்ளார்.
இதனால் டெல்லி ஓட்டல் அதிபர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.
டெல்லியில் 5 நட்சத்திர ஓட்டல்கள் 55 உள்ளன.இது தவிர, 120- நான்கு நட்சத்திர ஓட்டல்களும், 800- மூன்று நட்சத்திர ஓட்டல்களும் உள்ளன .
-பா.பாரதி.