விளம்பர செலவு 3,775 கோடியை பாஜக.விடம் வசூலிக்க வேண்டும்….கெஜ்ரிவால்

டில்லி:

விளம்பரத்திற்காக மத்திய அரசு செலவழித்த ரூ.3,775 கோடியை பா.ஜ.க.விடமிருந்து வசூல் செய்ய வேண் டும் என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

நொய்டாவை சேர்ந்த சமூக ஆர்வலர் ராம்வீர் தன்வார், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெற்ற தகவலில், 2014 ஏப்ரல் முதல் 2017 அக்டோபர் வரை விளம்பரத்திற்காக மத்திய அரசு ரூ.37,54,06,23,616 செலவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக டில்லி முதல்வர் கெஜ்ரிவால் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘ விளம்பரத்திற்காக ரூ.97 கோடி டில்லி அரசு செலவு செய்தது.

இதனை ஆம் ஆத்மியிடமிருந்து வசூலிக்க கவர்னர் உத்தரவிட்டார். தற்போது, இந்த உத்தரவை பின்பற்றி ஏன் பா.ஜ.க.விடமிருந்து ரூ.3 ஆயிரத்து 775 கோடியை திருப்பி வசூலிக்கக்கூடாது?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.