Random image

ஆளுநரின் மோதல் போக்கு: 3 நாளில் பதில் தெரிவிப்பதாக ராஜ்நாத் உறுதி! கெஜ்ரிவால்

டில்லி:

டில்லியில் மாநில அரசுக்கும் துணைநிலை ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து வரும் மோதல் காரணமாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை மாநில முதல்வர் கெஜ்ரிவால் நேற்று மாலை திடீரென சந்தித்து பேசினார்.

ஆளுநரின் மோதல் போக்குக்கு  3 நாளில் முற்றுப்புள்ளி வைப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் உறுதிஅளித்ததாக டில்லி முதல்வர் கெஜ்ரிவால்  தெரிவித்து உள்ளார்.

டில்லியில் மாநில அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத்திட்டங்களுக்கு மாநில துணைநிலை ஆளுநர் பைஜால் அனுமதி கொடுக்க மறுத்து இழுத்தடித்து வருகிறார். மாநில அரசில் யாருக்கு அதிகாரம் என்ற போட்டி நிலவி வருகிறது.

இது தொடர்பான வழக்கில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கே அதிகாரம் என்று கடந்த வாரம் உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்ததை தொடர்ந்து மாநில அரசு மக்கள் நலப் பணிகளில் தீவிரம் செலுத்தி வருகிறது.

இந்த நிலையில், அரசு, உயரதிகாரிகள் பணி நியமனம், பணியிட மாற்றம் செய்து முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டார். மாநில அரசின் இந்த உத்தரவுக்கு ஆளுநர் அனுமதி அளிக்காமல் முரண்டு பிடித்து வருகிறார். இதன் காரணமாக இருவருக்கும் இடையே மீண்டும் முட்டல் மோதல் தொடங்கி உள்ளது.

இந்தநிலையில், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை அரவிந்த் கெஜ்ரிவால் துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா ஆகியோர்  சந்தித்து பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், துணை நிலை ஆளுநரின்  செயல்பாடு குறி்த்து கூறியதாகவும், உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி ஆளுநர் செயல்பட அறுவுறுத்த கோரியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், மாநிலத்தில்  அதிகாரிகள் இடமாறுதல், நியமனத்தில் துணை நிலை கவர்னர் தலையிடாமல் கட்டுப்படுத்தி  வையுங்கள் என ராஜ்நாத்தங்கிடம் முறையிட்டேன் என்று கூறி னார்.

தங்களது வேண்டுகோளுக்கு, அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து மூன்று நாட்களில் முடிவு தெரிவிப்பதாக உறுதி அளித்துள்ளார் என்றும்  கெஜ்ரிவால் கூறினார்.