சீக்கியர்களுக்கு நீதி கிடைத்துள்ளது: சஜ்ஜன் குமார் தண்டனைக்கு கெஜ்ரிவால் வரவேற்பு

டில்லி:

சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு தொடர்பாக டில்லி காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அதை வரவேற்றுள்ள டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 34 ஆண்டுகளுக்கு பிறகு சீக்கியர்களுக்கு நீதி கிடைத்துள்ளது என்று கூறி உள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால்

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப் பட்டதால்,  1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை நடைபெற்றது.

டில்லியில்  நடந்த வன்முறையில் பலர் கொல்லப்பட்ட நிலையில், அது தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார் மீது புகார் பதியப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில்,  காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து டில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்புக்கு வரவேற்பும் எதிர்ப்பும் கிளம்பி உள்ள நிலையில், ஆத்ஆத்மி கட்சி தலைவரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்பு தெரிவித்து உள்ளார்.

சஜ்ஜன்குமார்

34 ஆண்டுகாலம் கழித்து சீக்கிய சமுதாயத்திற்கு நீதி கிடைத்துள்ளது என்று வரவேற்பு தெரிவித்து உள்ளார். இதுபோல 2022ம் ஆண்டு குஜராத் கலவரம் மற்றும் முசாபர் நகர் கலவரங்கங்கள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களும் தண்டிக்கப்படுவார்கள் என்று நம்புவதாகவும் தெரிவித்து உள்ளார்.