டில்லி

மெட்ரோ ரெயில் கட்டண உயர்வு மக்கள் நலனுக்கு எதிரானது என அர்விந்த் கெஜ்ரிவால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

டில்லி மெட்ரோ ரெயில் கட்டணங்கள் கடந்த மே மாதம் உயர்த்தப்பட்டது தெரிந்ததே.  தற்போது மீண்டும் வரும் மாதம் முதல் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. தற்போதுள்ள கட்டணத்தைவிட ரூ.10 வரை உயர்ந்துள்ளது.  இந்த உயர்வு வரும் மாதம் முதல் அமுலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில், “கடந்த மே மாதம் உயர்த்தப்பட்ட மெட்ரோ ரெயில் கட்டணம் மீண்டும் உயர்த்தியுள்ளதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்த கட்டண உயர்வு மக்கள் நலனுக்கு எதிரானது” என பதிந்துள்ளார்.