டெல்லியில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருப்பது மகிழ்ச்சி: முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லியில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருப்பது மகிழ்ச்சி தருவதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்பட்டது. ஆனால் சில நாட்களாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

இந் நிலையில் டெல்லியில் கொரோனா தொற்று குறித்து முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:

டெல்லி மக்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. ஆகையால் நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் கொரோனாவை டெல்லி அரசு எதிர்கொள்ளும் விதம் பற்றி நாட்டிலும், உலகமெங்கிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

டெல்லி கொரோனா பாதிப்பு முழுக்கட்டுப்பாட்டில் இருக்கிறது. சோதனை அடிப்படையில், டெல்லி மெட்ரோ நகரை மீண்டும் திறக்க அனுமதிக்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம் என்று கூறினார்.