ஆளுநரிடம் பணிந்த டெல்லி முதல்வர்..

ஆளுநரிடம் பணிந்த டெல்லி முதல்வர்..

யூனியன் பிரதேசங்களில் ஆளுநர்களுக்குக் கொஞ்சம் கூடுதல் அதிகாரம் இருப்பதால், அவர்களுக்கும், மாநில முதல்வர்களுக்கும் அவ்வப்போது முட்டல்- மோதல் ஏற்படுகிறது.

இரு தினங்களுக்கு முன்பு டெல்லியில் ஒரு மோதல்.

‘’ டெல்லியில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகள் மற்றும்  தனியார் மருத்துவமனைகளில் டெல்லி வாசிகளுக்கு மட்டுமே கொரோனா சிகிச்சை அளிக்கப்படும்’’ என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டார்.

’அந்த உத்தரவு செல்லாது’’ என்று கூறிய ஆளுநர் அனில் பாய்ஜல், ‘கெஜ்ரிவால் ஆணையை ரத்து செய்தார்.

அதிர்ச்சி அடைந்தாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாத கெஜ்ரிவால்’’ஆளுநர் முடிவுக்குக் கட்டுப்படுகிறேன்’’ என்று பணிந்துள்ளார்.

‘’அரசியல் செய்ய இது நேரம் அல்ல. அனைவரும் இணைந்து கொரோனாவை எதிர்த்துப் போராடுவோம்’’ என ஆன்லைன் மூலம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வேண்டுகோள் விடுத்துள்ளார், டெல்லி முதல்வர்.