டெல்லி: காங்கிரசின் டெல்லி அலுவலகமானது புலம்பெயர் தொழிலாளர்களின் தற்காலிக தங்குமிடமாக மாறி இருக்கிறது.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 3ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. வரும் 17ம் தேதியுடன் அந்த ஊரடங்கு முடிகிறது. அதன்பிறகு 4ம் கட்ட ஊரடங்கு வித்தியாசமானதாக இருக்கும்.
அதை மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் பிரதமர் மோடி கூறினார். அதே நேரத்தில் மத்திய அரசின் லாக்டவுனால் புலம் பெயர் தொழிலாளர்களின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது.
இன்னமும் சாலை மார்க்கமாக குழந்தைகள், பெண்கள் வெயிலில் சொந்த ஊர்களுக்கு நடந்து செல்லும் வீடியோக்கள் வெளியாகி மத்திய அரசின் அக்கறையின்மையை அப்பட்டமாக படம்பிடித்து காட்டுகிறது.
https://twitter.com/Supriya23bh/status/1261309544535220230
இன்னமும் தலைநகரில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர், இந் நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் புலம் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
சமூக இடைவெளியுடன் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதற்கான அனைத்து வசதிகளையும் காங்கிரஸ் கட்சி செய்திருக்கிறது. அவர்களுக்கு தேவையான உணவுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.