டெல்லியில் இன்று 1,544 பேருக்கு கொரோனா தொற்று: மொத்த எண்ணிக்கை 1,64,071 ஆக உயர்வு

டெல்லி: டெல்லியில் இன்று 1,544 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

 

டெல்லியில் சில நாட்களாக கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு கீழ் குறைந்து வருகிறது. ஆனால், டெல்லி சுகாதார துறை  இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, மேலும் 1,061 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது.

இதையடுத்து, மொத்த கொரோனா தொற்று எண்ணிக்கை 1,64,071 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரேநாளில் 17 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். ஒட்டு மொத்தமாக கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,330 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 1,155 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1,47,743 ஆக உயர்ந்துள்ளது. 11,998 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.