டெல்லியில் இன்று ஒரேநாளில் 652 பேருக்கு கொரோனா தொற்று..!

டெல்லி: டெல்லியில் இன்று ஒரேநாளில் மேலும் 652 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

டெல்லியில் தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை சற்று குறைந்து காணப்படுகிறது.

இந் நிலையில், டெல்லி சுகாதார துறை இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், டெல்லியில் இன்று மேலும் 652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டு உள்ளது.

ஒட்டு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,52,580 ஆக அதிகரித்து உள்ளது. ஒரேநாளில் 8 பேர் கொரோனாவால் உயிரிழக்க ஒட்டு மொத்த எண்ணிக்கை 4,196 ஆக உயர்ந்துள்ளது.

1,310 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து குணம் பெற்றவர்களின் எண்ணிக்கை 1,37,561 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் தற்போது வரை 10,823 பேர் சிகிச்சையில் உள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை அந்த செய்திக் குறிப்பில் கூறி உள்ளது.