டெல்லியில் ஒரேநாளில் 1,257 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி: 8 பேர் பலி

டெல்லி: டெல்லியில் ஒரேநாளில் மேலும் 1,257 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் முதலில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று சில நாட்களாக  பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்தே வருகிறது. இந் நிலையில், டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

டெல்லியில் இன்று மேலும் 1,257 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,47,391 ஆக அதிகரித்துள்ளது.

ஒரேநாளில் மாநிலத்தில் 8 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,139 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில்ம் இன்று 727 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். ஒட் மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,32,384 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் 10,868 பேர் சிகிச்சையில் உள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.