டெல்லி: டெல்லியில் இன்று மேலும் 2,866 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒட்டு மொத்தமாக கொரோனா தொற்று எண்ணிக்கை 3,06,559 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 48 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,740 ஆக அதிகரித்து உள்ளது.
டெல்லியில் இன்று 2,766 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி இருக்கின்றனர். இதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 2,78,812 ஆக உள்ளது.
டெல்லியில் தற்போது வரை 22,007 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.