டெல்லியில் இன்று மேலும் 4,235 பேருக்கு கொரோனா உறுதி: ஒட்டுமொத்த பாதிப்பு 2,18,304 ஆக உயர்வு

டெல்லி : டெல்லியில் இன்று மேலும் 4,235 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து டெல்லி சுகாதாரத்துறை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: டெல்லியில் இன்று மேலும் 4,235 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,18,304 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 29 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இதன் மூலம், கொரோனாவுக்கு பலியானவர்களின்  எண்ணிக்கை 4,744 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 3,403 பேர் கொரோனாவில் இருந்து குணமடைய, ஒட்டு மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,84,748 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் இன்னமும் 28,812 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.