டெல்லியில் இன்று 961 பேருக்கு கொரோனா தொற்று: 15 பேர் பலி

டெல்லி:  டெல்லியில் இன்று 961 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: டெல்லியில் இன்று மேலும் 961 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.

அதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,37,677 ஆக அதிகரித்துள்ளது.  டெல்லியில் இன்று 15 பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர். ஒட்டுமொத்தமாக கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,004 ஆக உயர்ந்துள்ளது.

ஒரேநாளில் 1,186 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1,23,317 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 10,356 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may have missed